மார்டினா ஹிங்கிசுடன், சானியா இணைந்த பிறகு வரிசையா இந்த இணை சாம்பியன் பட்டங்களை வென்று வருகிறது. ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் நடந்த முக்கியத்துவம் வாய்ந்த விம்பிள்டன் போட்டியில் இவர்கள் சாம்பியன் பட்டம் வென்று, உலகின் முதல் நிலை ஜோடி ஆன நிலையில், தற்போது அமெரிக்க ஓபன் போட்டியிலும் பட்டம் வென்று அசத்தி உள்ளனர்.
இந்த தொடரில் ஏற்கனவே, மார்டினா ஹிங்கிஸ் இந்தியாவின் லியாண்டர் பயசுடன் சேர்ந்து கலப்பு இரட்டையரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இதே இணை, விம்பிள்டன் போட்டியிலும் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.