Home Featured உலகம் மெக்கா பளுதூக்கி விபத்து: பலியான மலேசியர் அடையாளம் காணப்பட்டார்

மெக்கா பளுதூக்கி விபத்து: பலியான மலேசியர் அடையாளம் காணப்பட்டார்

589
0
SHARE
Ad

mecca-mosque-மெக்கா- மெக்கா பளுதூக்கி (கிரேன்) விபத்தில் பலியான மலேசியர் அடையாளம் காணப்பட்டார். இந்த விபத்தின் மரண எண்ணிக்கை தற்போது 111 ஆக உயர்ந்துள்ளது.

இந்த விபத்தில் பலியான 108 பேரின் புகைப்படங்களை சவூதி அதிகாரிகள் வெளியிட்டனர். அவற்றுள் பேராக் மாநிலத்தைச் சேர்ந்த ருசியா சார் (56 வயது) படமும் இடம்பெற்றுள்ளது. அவரை  தபுங் ஹாஜி எனப்படும் மலேசியாவின்ஹஜ் பயணிகளுக்கான அதிகாரபூர்வ அரசாங்க அமைப்பின் அதிகாரிகள் அடையாளம் கண்டனர்.

இதற்கிடையே மெக்காவில் விபத்து சமயத்தில் காணாமல் போன மேலும் 7 மலேசியர்களின் கதி குறித்து இன்னும் எந்தத் தகவலும் தெரியவில்லை. அவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தபுங் ஹாஜி அதிகாரிகள் ஈடுபட்டிருப்பதாக பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஜமில் கிர் பகரோம் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையே ருசியாவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள அவர், ருசியாவின் குடும்பத்தாருக்கு அவரது மறைவு குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.

“காணாமல் போன 7 மலேசியர்களின் குடும்பத்தார் பொறுமை காப்பதுடன், அவர்களுக்காக பிரார்த்தனை செய்வார்கள் என்றும் நம்புகிறேன். மாயமானவர்களை மெக்காவில் உள்ள அனைத்து மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் தேடி வருகிறோம். மலேசிய யாத்திரிகர்கள் அனைவரும் தபுங் ஹாஜியால் வழங்கப்பட்டுள்ள அடையாள பட்டை மற்றும் கைகளில் அணியும் அடையாளப் பட்டைகளை அணிந்திருப்பது அவசியம்” என்று ஜமில் மேலும் தெரிவித்தார்.