Home Featured நாடு டாக்டர் சுப்ரா தேசிய முன்னணி உதவித் தலைவராக நியமனம்!

டாக்டர் சுப்ரா தேசிய முன்னணி உதவித் தலைவராக நியமனம்!

604
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நேற்றிரவு இங்கு நடைபெற்ற தேசிய முன்னணி உச்சமன்றக் கூட்டத்தில், மஇகா தேசியத் தலைவரும் சுகாதாரத் துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார்.

BN-meeting-najib-14 sept 2015

நேற்று பிரதமர் நஜிப் தலைமையில் நடைபெற்ற தேசிய முன்னணி உச்சமன்றக் கூட்டத்தின்போது…

#TamilSchoolmychoice

இந்த நியமனம் மஇகாவுக்கு கிடைத்த கௌரவமாகவும், டாக்டர் சுப்ராவின் தனிப்பட்ட திறன்கள், தலைமைத்துவ ஆற்றல் ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்பட்ட பதவியாகவும் கருதப்படுகின்றது.

நேற்று நடைபெற்ற தேசிய முன்னணியின் உச்சமன்றக் கூட்டத்தில், மஇகாவைப் பிரதிநிதித்து அதன் தலைமைச் செயலாளர் சக்திவேல் அழகப்பனும் கலந்து கொண்டார்.

Subra-BN-meeting-14 sep 2015நேற்றைய தேசிய முன்னணி உச்சமன்றக் கூட்டத்தில் டாக்டர் சுப்ரா…

தேசிய முன்னணி உச்சமன்றத்தில் ஒவ்வொரு உறுப்பியக் கட்சியைப் பிரதிநிதித்து மூன்று பேர் கலந்து கொள்வார்கள்.  பொதுவாக மஇகாவின் சார்பில் அதன் தலைவர், துணைத் தலைவர், தலைமைச் செயலாளர் ஆகிய மூவரும் கலந்து கொள்வார்கள்.

மஇகாவின் தேர்தல்கள் இன்னும் முடிவடையாத நிலையில் துணைத் தலைவராக இதுவரை யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதால், மஇகா சார்பில் டாக்டர் சுப்ரா, சக்திவேல் இருவர் மட்டுமே நேற்று கலந்து கொண்டனர்.

நேற்றைய தேசிய முன்னணி உச்சமன்றக் கூட்டத்தில் முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினும், அம்னோவின் துணைத் தலைவர் என்ற முறையில் கலந்து கொண்டார்.