கோலாலம்பூர்- நாளை நடைபெறவுள்ள சிவப்புச் சட்டை பேரணியில் அனைத்து இனத்தவர்களும் பங்கேற்கலாம் என கூடட்ரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான்
கூறியுள்ளார்.
“மலாய்க்காரர்கள், சீனர்கள் அல்லது இந்தியர்கள் என எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆயினும், இந்த தேசத்தை நேசிப்பவர்கள் எனில், அரசாங்கத்துக்கான தங்களின் ஆதரவைப் புலப்படுத்த பேரணியில் பங்கேற்பார்கள் ன நம்புகிறேன்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் பேரணியில் பங்கேற்பது அவரவரின் தனிப்பட்ட விருப்பம் என்று
குறிப்பிட்ட அவர், இது மலாய்க்காரர்களுக்கு மட்டுமே ஆன பேரணியல்ல என்றார்.
“பேரணி நடத்த வேண்டும் என்ற யோசனையை அரசாங்கம் முன் வைக்கவில்லை. இது
தொடர்பாக ஏற்பாட்டாளர்களுடன் நாங்கள் பேசவும் இல்லை. எனவே இத்தகையதொரு
ஏற்பாட்டை நாங்கள் ஆதரிக்கவில்லை. அதேசமயம் இந்த முன்னெடுப்பை தடுக்கவும்
இல்லை. ஏற்பாட்டாளர்கள் சட்ட விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதே
முக்கியம்.”
“இந்தப் பேரணியில் நான் பங்கேற்கவில்லை. அச்சமயம் நான் இங்கு இருக்கமாட்டேன்,” என்று தெங்கு அட்னான் மேலும் தெரிவித்தார்.