Home உலகம் இலங்கைப் போர்க்குற்றத்தை உலகிற்குக் காட்டும் புதிய ஆவணப்படம்!

இலங்கைப் போர்க்குற்றத்தை உலகிற்குக் காட்டும் புதிய ஆவணப்படம்!

605
0
SHARE
Ad

No-Fire-Zone-Callum-Macrae-41கொழும்பு – இலங்கை ராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற போரின் போது இலங்கை ராணுவத்தினர் அப்பாவித் தமிழர்கள் மீது நடத்திய கொலை வெறித் தாக்குதல்களை, மனித உரிமை மீறல்களை இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சி மூலம் அனைத்துலக மக்களுக்கு வெளிப்படுத்தியவர்களில் ஒருவர் கல்லம் மக்ரே.

இவர் தற்போது ‘இலங்கை நீதிக்கான தேடல்’ (Sri Lanka: The Search For Justice) என்ற தலைப்பில் புதிதாக அரை மணிநேர ஆவணப்படம் ஒன்றைத் தயாரித்துள்ளார்.

இலங்கையின் போர்க் குற்றங்களை ஆவணப்படுத்தி அனைத்துலக விசாரணையை வலியுறுத்தும் நோக்கில் இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கல்லம் மக்ரே கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

இந்த ஆவணப்படம் ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஸ் மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழ், சிங்களம், ஹிந்தி, பிரெஞ்சு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு அடுத்த சில நாட்களில் இணையத்தில் வெளியாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது பொலிவியா, பாராகுவே, ஆர்ஜென்ட்ரீனா, மெக்சிகோ, பிரேசில் ஆகிய தென்அமெரிக்க நாடுகளில் கல்லம் மக்ரே இந்த ஆவணப்படத்தின் முன்னோட்டத்தைக் காண்பித்து வருகிறார்.

அடுத்து அமெரிக்கா சென்று நியூயார்க், வாஷிங்டனில் அரசு அதிகாரிகள், மனித உரிமை ஆணையத்தினர் மத்தியில் இந்த ஆவணப்படத்தைத் திரையிட்டுக் காண்பிக்க உள்ளதாகவும், அதன் பின்னர் ஜெனீவாவிலும் ஐநா தலைமையக வளாகத்திலும் காண்பிக்க உள்ளதாகவும் கல்லம் மக்ரே கூறியுள்ளார்.