புத்ராஜெயா-சிவப்புச் சட்டை பேரணி என்பது மலாய்க்காரர்களுக்காகப் போராடும் பேரணியல்ல என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தெரிவித்துள்ளார். சிவப்புச் சட்டை பேரணி ஏற்பாட்டாளர்கள், தங்களை நியாயப்படுத்திக் கொள்ளும் வகையிலேயே, அண்மையில் நடைபெற்ற பெர்சே பேரணியை இனவாதச் செயல் என திரித்துக் கூறியுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.
“பெர்சே பேரணி இனவாத நடவடிக்கை என்று கூறி சிவப்புச் சட்டை பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் பெர்சே பேரணி இனவாத செயல் அல்ல. ஏனெனில் அதில் அனைத்து இனத்தவர்களும் பங்கேற்றனர். எனவே மலாய்க்காரர்களை தாங்கள் மட்டுமே ஒருங்கிணைக்க இயலும் என காட்டிக் கொள்வதற்காக சிவப்புச் சட்டை பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் ஏற்பாட்டாளர்கள் மலாய்க்காரர்களுக்காகப் போராடவில்லை. எனவே இத்தகைய பேரணி ஏற்பாடு செய்வதற்கான அவசியமே இல்லை” என்றும் மகாதீர் மேலும் கூறியுள்ளார்.