Home Featured நாடு சிவப்புப் பேரணி: செல்லியல் ஒரு வரிச் செய்திகள்! (தொகுப்பு 3)

சிவப்புப் பேரணி: செல்லியல் ஒரு வரிச் செய்திகள்! (தொகுப்பு 3)

551
0
SHARE
Ad

Red shirt-rally-16 sept 2015

  • சிவப்புச் சட்டைப் பேரணியில் மாலை 5 மணியளவில், சில தரப்பினர் காவல்துறையினரை நோக்கி தண்ணீர் குடுவைகளை வீசி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது!
  • நிலமையைக் கட்டுக்குள் கொண்டு வர கலவரத் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் அவர்களை நோக்கி ரசாயனம் கலந்த நீரைப் பீய்ச்சி அடித்து அவர்களைக் கட்டுப்படுத்தினர்!
  • பேரணி அமைதியாக செல்வதாகக் கேள்விப்பட்ட பிரதமர் நஜிப் துன் ரசாக் அதிர்ச்சியும், மகிழ்ச்சியும் அடைந்ததோடு பங்கேற்பாளர்களுக்கு வாழ்த்துகளையும் கூறியதாக அம்னோ உச்சமன்ற தலைவர் அனுவார் மூசா கூறியுள்ளார்.
  • பேரணியில் மொத்தம் 250,000 பேர் பங்கேற்றுள்ளதாக அனுவார் மூசா தெரிவித்துள்ளார்.
  • இரவு 8 மணி நிலவரப்படி, பேரணியில் பாதுகாப்பில் இருந்த மூன்று காவல்துறையினருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது – பேரணியில் வன்முறை ஏற்பட்டது குறித்து விசாரணை நடத்த பிரதமர் நஜிப் உத்தரவிட்டுள்ளார்.