Home உலகம் சிங்கப்பூர் தேர்தல் வெற்றி – லீ சியான் லூங்கிற்கு ஒபாமா வாழ்த்து!

சிங்கப்பூர் தேர்தல் வெற்றி – லீ சியான் லூங்கிற்கு ஒபாமா வாழ்த்து!

526
0
SHARE
Ad

lee-obamaசிங்கப்பூர் – சிங்கப்பூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பொதுத் தேர்தலில், லீ சியான் லூங்கின் பிஏபி கட்சி வெற்றி பெற்றதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா, நேற்று முன்தினம் (15-ம் தேதி), அவருக்கு தொலைபேசி மூலம் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமெரிக்க வெள்ளை மாளிகையின் பத்திரிக்கை தொடர்புச் செயலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அதிபர் ஒபாமா, சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங்கை தொலைபேசி மூலம் அழைத்து தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.”

“மேலும், இரு நாடுகளுக்கு இடையேயான உறவினை வலுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் இருவரும் ஆலோசனை நடத்தினர். சிங்கப்பூரின் 50-வது  ஆண்டு சுதந்திர தின விழாவிற்கும் ஒபாமா தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.