Home உலகம் சிரியா குழந்தை அய்லானின் மரணம் பற்றிக் கேலிச் சித்திரம்: உலகத்தார் கண்டனம்!

சிரியா குழந்தை அய்லானின் மரணம் பற்றிக் கேலிச் சித்திரம்: உலகத்தார் கண்டனம்!

589
0
SHARE
Ad

17-1442430428-charlienewwwwwபாரிஸ் – சிரியா உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டு அங்கிருந்து தப்பி அகதிகளாகப் பல குடும்பத்தினர் ஐரோப்பிய நாடுகளுக்குப் படகில் கடல் மார்க்கமாகச் சென்ற போது, படகு கவிழ்ந்து, கடலில் மூழ்கி இறந்து, துருக்கிக் கடற்கரையில் சடலமாக ஒதுங்கிக் கிடந்த 3 வயதுக் குழந்தை அய்லானின் புகைப்படம், உலகையே உலுக்கிப் போட்டது.

அதன் விளைவாக அகதிகளை ஏற்றுக் கொள்ள மறுத்து வந்த பிரிட்டன் போன்ற நாடுகள், உடனடியாகச் சிரியா அகதிகளை ஏற்றுக் கொண்டன.

உலக மக்களிடம் அத்தகைய பெரும் தாக்கத்தை உண்டாக்கிய 3 வயதுக் குழந்தை அய்லானின் மரணத்தைப் பிரெஞ்சு இதழான சார்லி ஹெப்டோ, கேலிச் சித்திரம் வெளியிட்டுள்ளது சர்ச்சையைக்  கிளப்பியுள்ளது.

#TamilSchoolmychoice

அந்தக் கேலிச்சித்திரத்தில் ஏசு கிறிஸ்து தோற்றத்தில் ஒருவர் கடல் நீரின் மீது நடந்து வருவதைப் போலவும், அதற்கு அருகே சிரியா நாட்டுக் குழந்தை கடலில் மூழ்கிக் கிடக்கும் படமும் வரையப்பட்டு, ‘கிறிஸ்தவர்கள் நீரில் மேல் நடக்கும் வல்லமை கொண்டவர்கள் என்றும், இஸ்லாமிய குழந்தை நீரில் மூழ்கத்தான் முடியும் என்றும்’ அதில் விளக்கக் குறிப்பு வேறு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கேலிச் சித்திரத்திற்கு உலகம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

இதற்கு முன்பு இந்தப் பத்திரிகை இது போல் நபிகள் நாயகத்தைப் பற்றிக் கேலிச் சித்திரம் வெளியிட்டிருந்தது. இதைக் கண்டித்து, தீவிரவாதிகள் சிலர் ‘சார்லி ஹெப்டோ’ அலுவலகத்திற்குள் புகுந்து 12 ஊழியர்களைச் சுட்டுக் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.