Home இந்தியா மும்பை ரயில் தொடர் குண்டுவெடிப்புக் குற்றவாளிகளுக்கான இறுதித் தீர்ப்பு மீண்டும் ஒத்திவைப்பு!

மும்பை ரயில் தொடர் குண்டுவெடிப்புக் குற்றவாளிகளுக்கான இறுதித் தீர்ப்பு மீண்டும் ஒத்திவைப்பு!

465
0
SHARE
Ad

mumbai-tain-blast_0_0மும்பை – 2006 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் 12 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரத்தை மும்பை நீதிமன்றம், வரும் திங்கட்கிழமைக்கு ஒத்தி வைத்துள்ளது.

மும்பையில் கடந்த 2006 ஆம் ஆண்டு 7 ரயில்களில் தொடர்ச்சியாக நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் 188 பேர் பலியானார்கள்; நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தார்கள். இந்த வழக்கில் 12 பேரைக் குற்றவாளிகள் என உறுதி செய்து மும்பை சிறப்பு நீதிமன்றம் கடந்த வாரம் அறிவித்தது.

அதைத் தொடர்ந்து அவர்களுக்கான தண்டனை விபரங்கள் கடந்த 14-ந் தேதி அறிவிக்கப்படுவதாக இருந்தது. ஆனால், அன்று தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படாமல் புதன்கிழமைக்குத் தள்ளி வைக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

இந்நிலையில் நேற்று இது தொடர்பான விசாரணை நடைபெற்றபோது, குற்றவாளிகளின் வழக்கறிஞர்கள் தூக்கு தண்டனை அளிக்கக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால், தண்டனை விவரங்களை அளிப்பதை வரும் திங்கட்கிழமைக்கு நீதிபதி ஷின்டே ஒத்திவைத்தார்.

அன்று கண்டிப்பாகத் தீர்ப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.