Home இந்தியா மதிமுகவின் மாநிலப் பொருளாளர் மாசிலாமணி கட்சியில் இருந்து விலகினார்!

மதிமுகவின் மாநிலப் பொருளாளர் மாசிலாமணி கட்சியில் இருந்து விலகினார்!

574
0
SHARE
Ad

dmdmk1வைகோவுடன்  மாசிலாமணி (வலதுபுறம் இருப்பவர்)

சென்னை – மதிமுகவின் மாநிலப் பொருளாளர் மாசிலாமணி, கட்சி சார்ந்து அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும், விலகுவதாக திண்டிவனத்தில் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு அறிவித்துள்ளார். பாலவாக்கம் சோமு, சேலம் மாவட்ட நிர்வாகி தாமரைக்கண்ணன் வரிசையில், மாசிலாமணியும் திமுகவில் இணைவார் என்றே தெரிகிறது.

இதற்கிடையே தனது கட்சியினர் திமுகவில் இணைவது குறித்து பேசிய வைகோ, “யார் வேண்டுமானாலும் திமுகவில் இணையலாம். அவர்களை நானே வாழ்த்தி அனுப்பி வைக்கிறேன். அவர்கள் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும்” என்று விரக்தியுடன் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.