Home உலகம் கடிகாரம் உருவாக்கியதற்காகக் கைது செய்யப்பட்ட மாணவனை ஒபாமா விருந்திற்கு அழைப்பு!

கடிகாரம் உருவாக்கியதற்காகக் கைது செய்யப்பட்ட மாணவனை ஒபாமா விருந்திற்கு அழைப்பு!

501
0
SHARE
Ad

18-1442552130-ahmed-mohamed-invited-to-white-house-by-obama--zuckerberg-appreciates-the-youth5-600வாஷிங்டன் –அமெரிக்காவில்  டிஜிட்டல் கடிகாரம் உருவாக்கியதற்காகத் தீவிரவாதி போல் கைது செய்யப்பட்ட பள்ளி மாணவர் அகமது முகமதுவை, வெள்ளை மாளிகைக்கு விருந்திற்கு அழைத்துள்ளார் அமெரிக்க அதிபர் ஒபாமா.

மேலும்,அம்மாணவனைச் சந்திக்க விரும்புவதாகப் பேஸ்புக் நிறுவனர் மார்க்கும் விருப்பம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணம், இர்விங் நகரில் இயங்கி வரும் பள்ளி ஒன்றில் பயிலும் மாணவர் அகமது முகமது. அறிவியலில் மிகுந்த ஆர்வம் உள்ள அவன்,பென்சில் பெட்டியில் சொந்தமாகக் கடிகாரம் ஒன்றைச் செய்து அதனை தனது வகுப்பு ஆசிரியரிடம் பெருமையாகக் காட்டியுள்ளான் அகமது.

#TamilSchoolmychoice

ஆனால், அதனை அவர் வெடிகுண்டு எனத் தவறுதலாகப் புரிந்து கொண்டு காவல்துறையினரை அழைத்துள்ளார். உடனே காவல்துறையினர் பள்ளிக்கு வந்து மாணவர்கள் மத்தியில் அகமதுவைக் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனே அகமதுவைக் கைது செய்ததற்கு எதிர்ப்பும், அகமதுவிற்கு ஆதரவும் பெருகியதைத் தொடர்ந்து அவன் விடுவிக்கப்பட்டான்.

அப்பாவி மாணவர் அகமதுவுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் வகையில் #IStandWithAhmed எனும் தகவல் பக்கத்தை உருவாக்கிச் சமுக வலைதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பல தரப்பினரும் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிலையில், அந்த மாணவனுக்குப் பாராட்டுத் தெரிவித்திருப்பதோடு அவனை வெள்ளை மாளிகைக்கு விருந்திற்கு வருமாறும் அமெரிக்க அதிபர் ஒபாமா அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக ஒபாமா தனது டுவிட்டரில், “நீங்கள் செய்த கடிகாரம் மிகவும் அருமை. அதை அதிபர் மாளிகைக்கு எடுத்து வர விருப்பமா? உங்களைப் போன்ற சிறுவர்களின் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டியது மிகவும் முக்கியம். அவ்வாறு செய்து வருவதால்தான் அமெரிக்கா மாபெரும் நாடாக உள்ளது” எனப் பதிவு செய்துள்ளார்.

இதேபோல், பேஸ்புக் நிறுவனர் மார்க் வெளியிட்டுள்ள பதிவில், “அறிவியலிலும் புதிய பொருட்களை உருவாக்குவதிலும்,  அதிக ஆர்வமும் கனவும் லட்சியமும் கொண்டவர்கள் பாராட்டப்பட வேண்டும். மாறாகக் கைது செய்யப்படக் கூடாது. அகமதுவைச்  சந்திக்க ஆர்வமாக உள்ளேன். அகமது பேஸ்புக் தலைமையகத்திற்கு வர விரும்பினால் வரலாம்.”  என அவர் தெரிவித்துள்ளார்.