Home Featured நாடு புகைமூட்டம்: பெகான் பாருவில் இருந்து 173 மலேசியர்கள் மீட்பு

புகைமூட்டம்: பெகான் பாருவில் இருந்து 173 மலேசியர்கள் மீட்பு

556
0
SHARE
Ad

Riau-indonesia-mapபுத்ராஜெயா- புகைமூட்டத்தால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள இந்தோனேசியாவின் ரியாவ் மாகாணத்தில் இருந்து 173 மலேசியர்கள் பத்திரமாக மீட்கப்பட உள்ளதாக மலேசிய வெளியுறவு அமைச்சு அறிவித்தது.

அங்குள்ள மலேசியர்களை, குறிப்பாக மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாரை மீட்க விமானப்படையின் சி-130 ரக விமானங்கள் இரண்டு அங்கு அனுப்பி வைக்கப்படும் என வெளியுறவு அமைச்சு வெள்ளிக்கிழமை காலை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

மீட்கப்படும் மலேசியர்களுடன் அந்த விமானங்கள் சுபாங்கில் உள்ள அரச மலேசிய விமானப் படை தளத்துக்கு வந்தடையும் என்றும், இந்த நடவடிக்கை வெளியுறவு அமைச்சு மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஆகியவற்றால் மேற்கொள்ளப்படுகிறது என்றும் அந்த அறிக்கை மேலும் தெரிவித்தது.

#TamilSchoolmychoice

இதற்கிடையே ரியாவ் மாகாணத்தின் தற்போதைய நிலவரத்தைக் கண்காணிக்கவும், அங்குள்ள மலேசியர்களுக்கு உதவவும் அங்கு நடவடிக்கை அறை (operations room) ஒன்று திறக்கப்பட்டுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.

இதற்கிடையே 173 மலேசியர்களும் பத்திரமாக கோலாலம்பூர் வந்தடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 15ஆம் தேதி புகைமூட்டமானது அபாய அளவை எட்டிப்பிடித்ததால் ரியாவ் மாகாணத்தில் அவசர நிலையை பிரகடனப்படுத்தி உள்ளது இந்தோனேசிய அரசு.