Home நாடு “கொல்லப்பட்ட சுலு தலைவர் மோரோ இயக்கத்தின் முன்னாள் தளபதியாக இருக்கலாம்” – காவல்துறை

“கொல்லப்பட்ட சுலு தலைவர் மோரோ இயக்கத்தின் முன்னாள் தளபதியாக இருக்கலாம்” – காவல்துறை

597
0
SHARE
Ad

FETUREDலகாட் டத்து, மார்ச் 12 – கடந்த வாரம் மலேசியப் படையினரால் கொல்லப்பட்ட ஊடுருவல்காரர்களின் தலைவர் யாரென்ற விவரம் சவப் பரிசோதனையின் மூலம் தெரிய வந்துள்ளது. அவர் மோரோ தேசிய விடுதலை முன்னணி (MNLF) இயக்கத்தைச் சேர்ந்த முன்னாள் தளபதி ஹாஜி மூசாவாக இருக்கலாம் என்று நம்பப்படுவதாகக் காவல்துறை ஆணையர் ஹம்சா தாயிப் நேற்று லகாட் டத்துவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.

இது பற்றி அவர் மேலும் கூறுகையில், “தற்போது அவர் ஹாஜி மூசா தான் என்று என்னால் உறுதியளிக்க முடியாது. சவப்பரிசோதனையின் மூலம் ஹாஜி மூசா என்று நம்பப்படுகிறது.ஆனால் அது பற்றி முழுமையான தகவல்கள் அடங்கிய மருத்துவ அறிக்கை இன்னும் என் கைகளில் வந்து சேரவில்லை. அதற்கான ஆதாரங்கள் எனக்கு கிடைத்த பின்னரே என்னால் உறுதியளிக்க முடியும்” என்று கூறினார்.

கடந்த வாரம் காவல்துறை தலைவர் இஸ்மாயில் ஓமார் வெளியிட்டிருந்த அறிக்கையில், கொல்லப்பட்ட தலைவர் சுலு சுல்தானின் வாரிசுகளான அஜிமுடி கிராமோ அல்லது அவரது சகோதரர் ஜமால் கிராமோ இல்லை என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

மேலும் நேற்று பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட பதின்ம வயது வாலிபர் பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, நமது பாதுகாப்புப் படையில் உள்ள வீரர்கள் அனைவரும் தரைப்படையில் நன்கு பயிற்சி பெற்றவர்கள் என்றும் எனவே பதட்டதினாலோ, பயத்தினாலோ அவர்கள் துப்பாக்கி சூட்டை நடத்தியிருக்க வாய்ப்பு இல்லை என்றும், காவல்துறை குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012 (Sosma) 130 (c) ஆகிய பிரிவுகளின் கீழ் பாதுகாப்புப் படையினர் செயல்பட்டதாகவும்  ஹம்சா தையிப் தெரிவித்தார்.அத்துடன் கொல்லப்பட்ட வாலிபர் யாரென்று அறிந்துகொள்ள, குற்ற புலனாய்வுத் துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.