Home Featured கலையுலகம் சிவகார்த்திகேயனைத் தாக்கியது தனது இரசிகர்களா? – விசாரிக்கும் கமல்!

சிவகார்த்திகேயனைத் தாக்கியது தனது இரசிகர்களா? – விசாரிக்கும் கமல்!

691
0
SHARE
Ad

Kamal-Hassan-Sivakarthigeyanசென்னை – நேற்று திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் நிறுவப்பட்டுள்ள அவரது உருவச்சிலையை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்த நிகழ்ச்சியில் நடிகர் கமலஹாசனும் நடிகர் சிவகார்த்திகேயனும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, மதுரை வந்த சிவகார்த்திகேயனை கமல் இரசிகர்கள் தாக்கினார்கள் என்ற பரபரப்பான செய்தியைத் தகவல் ஊடகங்கள் வெளியிட்டிருந்தன.

இதைத் தொடர்ந்து, சிவந்தி ஆதித்தனார் உருவச் சிலை திறப்பு விழாவுக்குப் பின்னர் சிவகார்த்திகேயனிடம் நடந்தது என்ன என்பது குறித்து கமல் அக்கறையோடு விசாரித்துக் கேட்டுத் தெரிந்து கொண்டாராம்.

#TamilSchoolmychoice

சிவகார்த்திகேயனுக்கு ஆறுதல் சொல்லி, ஆதரவாகப் பேசிய கமல், சென்னை திரும்பியதும் தனது இரசிகர் மன்றத்தலைவர்களிடம் தொடர்பு கொண்டு, சிவகார்த்திகேயனுக்கு எதிராகக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் யார்? உண்மையிலேயே தனது இரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள்தானா? என்பது போன்ற விவரங்களை விசாரிக்கச் சொல்லியிருப்பதாக, தமிழக ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.

தனது பெயரும், தனது இரசிகர்களின் பெயரும் இந்தத் தகாத சம்பவத்தில் இழுக்கப்பட்டுள்ளதால், இந்த விவகாரத்தைக் கடுமையாகக் கருதுகிறாராம் கமல்.

அதனால், விசாரித்து, சிவகார்த்திகேயனுக்கு எதிரான சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தனது இரசிகர்கள்தான் என்பது உறுதியானால், அவர்கள் மீது இரசிகர் மன்றத்தின் மூலமாக நிச்சயம் கமல் நடவடிக்கை எடுப்பார் என்றும் தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.