கோலாலம்பூர் – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை, அமெரிக்காவின் மத்திய பெரிய நடுவர் மன்றம் (federal grand jury) ஆய்வு செய்யவுள்ளதாக ‘நியூயார்க் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
பிரதமரின் வளர்ப்பு மகனுக்குச் சொந்தமான ஷெல் நிறுவனம் அமெரிக்காவில் வாங்கியுள்ள சொத்துகள் மற்றும் நஜிப்புக்கு நெருக்கமான குடும்ப உறவினர்கள் வாங்கியுள்ள நிலங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் ‘நியூயார்க் டைம்ஸ்’ குறிப்பிட்டுள்ளது.
மேலும், அமெரிக்காவில் இருக்கும் வங்கியில் இருந்து நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு வந்த 681 மில்லியன் அமெரிக்க டாலர் குறித்தும் விசாரணை அதிகாரிகள் ஆய்வு செய்யவுள்ளதாகவும் அப்பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது.