Home Featured இந்தியா வாட்சாப், டுவிட்டர் குறுஞ்செய்திகளை கண்காணிக்க இந்திய அரசு முடிவா?

வாட்சாப், டுவிட்டர் குறுஞ்செய்திகளை கண்காணிக்க இந்திய அரசு முடிவா?

728
0
SHARE
Ad

whatsappindia1புது டெல்லி – இந்தியா, சீனாவைப் போல் அல்லாமல் இணையம் சார்ந்த அனைத்து விவகாரங்களிலும் பொதுமக்களுக்கு போதுமான சுதந்திரத்தை அளித்துள்ளது. இந்நிலையில், இந்த சுதந்திரத்தை முடக்கும் வகையில் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இணையதளத்தில் ஒரு புதிய திட்டவரைவு வெளியிடப்பட்டுள்ளது.

அந்த திட்டவரைவின் படி, நட்பு ஊடகங்களான பேஸ்புக், வாட்சாப், ஆப்பிளின் ஐ-மெசேஜ் (i-Message), டுவிட்டர் போன்ற சேவைகளை பயன்படுத்துபவர்கள், தங்களின் தனிப்பட்ட குறுஞ்செய்திகளை கண்டிப்பாக அடுத்த 90 நாட்களுக்கு சேமித்து வைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இணையச் சேவை வழங்கும் நிறுவனங்களும் பயனர்களின் தகவல்களை சேமித்து வைக்கும் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

பயனர்களோ, இணைய நிறுவனங்களோ அரசு குறிப்பிடுபடி செய்யவில்லை என்றால் அது சட்டத்திற்கு புறம்பான செயல் என்றும் அந்த திட்டவரைவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

#TamilSchoolmychoice

இந்த விவகாரம் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மக்களின் இணையச் சுதந்திரம் பறிக்கப்படுவதாக சர்ச்சைகள் எழுந்தன. இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அரசு, “நட்பு ஊடகங்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளது.

அரசு திடீரென என இந்த திட்டவரைவை அறிமுகப்படுத்தியதற்கான காரணங்கள் தெரியவில்லை. நட்பு ஊடகங்கள் வாயிலாக சமூக விரோத செயல்கள் நிகழ்வதால் அதனை தடுக்க இந்த நடவடிக்கைகளில் அரசு இறங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.