Home உலகம் கிரீஸ் தேர்தலில் வெற்றி: அலெக்ஸ் சிப்ராஸ் மீண்டும் பிரதமரானார்!

கிரீஸ் தேர்தலில் வெற்றி: அலெக்ஸ் சிப்ராஸ் மீண்டும் பிரதமரானார்!

486
0
SHARE
Ad

21-aug-tsஏதென்ஸ் – கிரீஸ் நாட்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில்அலெக்சிஸ் சிப்ராஸ் தலைமையிலான சிரிசா கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் சிப்ராஸ் 2–ஆவது முறையாகக் கிரீஸ் நாட்டின் பிரதமர் ஆகிறார்.

கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் தலைமையிலான சிரிசா கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்தது.

இதனால் அவரது ஆட்சி கலைக்கப்பட்டு அங்கு செப்டம்பர் 20–ஆம் தேதி தேர்தல் நடந்தது.

#TamilSchoolmychoice

இதில் சிப்ராசின் தலைமையிலான சிரிசா முற்போக்குக் கூட்டணிக்கும், புதிய ஜனநாயகக் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

வாக்கு எண்ணிக்கையின் முடிவில், மொத்தம் 300 உறுப்பினர்களைக் கொண்ட கிரீஸ் நாடாளுமன்றத்தில் 145 இடங்களைச் சிரிசா கூட்டணி கைப்பற்றியது.

புதிய ஜனநாயகக் கட்சி 75 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. சிறு கட்சிகளுக்கு 10 முதல் 18 இடங்கள் கிடைத்தன.

300 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் ஆட்சி அமைப்பதற்கு 151 இடங்கள் தேவை. ஆனால்,சிப்ராஸ் கட்சிக்கு 145 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. ஆகவே, சிறு கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க சிப்ராஸ் முடிவு செய்துள்ளார்.

இதனால் சிப்ராஸ் 2–ஆவது முறையாகக் கிரீஸ் நாட்டின் பிரதமர் ஆகிறார்.

இந்த வெற்றி தனக்கு மிகுந்த நம்பிக்கையைத் தருவதாகவும், அடுத்த நான்கு ஆண்டுகளுக்குச் சிறப்பான ஆட்சியைக் கிரீஸ் மக்களுக்குத் தரப்போவதாகவும் அவர்  மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.