Home Featured நாடு ‘பக்காத்தான் ஹராப்பான்’ – புதிய எதிர்கட்சிக் கூட்டணி உதயமானது!

‘பக்காத்தான் ஹராப்பான்’ – புதிய எதிர்கட்சிக் கூட்டணி உதயமானது!

557
0
SHARE
Ad

Pakatan harapanசுபாங் – பிகேஆர், ஜசெக மற்றும் அமனா நெகாரா ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து பக்காத்தான் ஹராப்பான் என்ற புதிய எதிர்கட்சிக் கூட்டணியை இன்று உருவாக்கியுள்ளன.

கூட்டணிக் கட்சிகளுடனான வட்டமேசை கூட்டத்திற்குப் பிறகு பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.

பாஸ் உட்பட எந்த கட்சியாக இருந்தாலும், பக்காத்தான் ஹராப்பானில் இணைய விரும்பினால் அதற்கு இடம் இருப்பதாக வான் அசிசா தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“எதிர்கட்சிகள் ஒன்றாக இணைந்து செயல்படுவதைப் பார்ப்பதில் மக்கள் அதிக நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். இது மக்களுக்காக” என்று வான் அசிசா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

புதிய கூட்டணிக்கான பொது கொள்கைகளையும், பணி நெறிமுறைகளையும் வகுக்கவும், ஒப்பந்தங்களைக் கையாளவும் சிறப்பு செயற்குழு அமைக்கப்படும் என்றும் வான் அசிசா தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், அடுத்த பொதுத்தேர்தலில் புதிய கூட்டணி வெற்றி பெறும் பட்சத்தில், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தான் பிரதமர் பதவி வகிப்பார் என்பதை கூட்டணிக் கட்சிகள் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் வான் அசிசா தெரிவித்துள்ளார்.