கோலாலம்பூர் – தேவையில்லாத ஜிமெயில் முகவரிகளால் பெரும் தொந்தரவுக்கு ஆளாகுபவர்களுக்காகவே ஜிமெயில், புதிய மேம்பாடுகளை அறிமுகப்படுத்தி உள்ளது. ‘ப்ளாக்’ (Block) மற்றும் ‘அன்சப்ஸ்க்ரைப்’ (Unsubscribe) என்ற இந்த வசதிகள் மூலம், நமது மின்னஞ்சல் முகவரிக்கு வரும் தேவையில்லாத மின்னஞ்சல்களை நேரடியாக ‘ஸ்பாம்’ (Spam) ‘ஃபோல்டருக்கு’ (Folder) அனுப்ப முடியும்.
ஏற்கனவே இணையப் பதிவில் அன்சப்ஸ்க்ரைப் வசதி இருந்தாலும், அண்டிரொய்டில் ஜிமெயிலைப் பயன்படுத்துபவர்களுக்கு அது இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில், அந்த வசதி அண்டிரொய்டில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், நமக்கு தொடர்பில்லாத விளம்பரங்களைத் தவிர்க்க முடியும்.