கலாமின் மரணம் தொடர்பாக பொன்ராஜ் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், “கடந்த, 1996-ம் ஆண்டு முதல், அப்துல் கலாமுடன் இணைந்து பணியாற்றியும், அதன்பின், ஆலோசகராகவும் இருந்து வந்தேன். அவருடைய மரணம் எதிர்பார்க்காத ஒன்று. நான் அப்போது, மதுரை வந்து விட்டேன். நான் கேள்விப்பட்ட வரை, மேகாலயா சென்ற அவர், அம்மாநில ஆளுநர் சண்முகநாதனுடன் இணைந்து சாப்பிட்டு விட்டு, ஐஐஎம் நிறுவனத்துக்கு சென்றுள்ளார்.”
“அவருடன் எந்த மருத்துவக்குழுவும் செல்லவில்லை. அதை அவர் விரும்பவும் மாட்டார். அங்கு நடந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட அவர், திடீரென நெஞ்சில் கைவைத்தவாறு, வாயை திறந்தபடி கீழே விழுந்துள்ளார். அங்கு, யாராவது மருத்துவர்கள் இருந்திருந்தால், காப்பாற்றியிருக்கலாம். அதன்பின், ஆம்புலன்ஸ் மூலம் அவரை கொண்டு சென்றுள்ளனர்.”
கலாம் மறைந்து இரண்டு மாதங்கள் ஆகி உள்ள நிலையில், அவரது மரணம் குறித்து தற்போது சர்ச்சையை கிளப்புவது ஏன்? என்று புரியவில்லை. அவர் மரணம் அடைந்த பிறகு பல்வேறு ஊடகங்களுக்கு பொன்ராஜ் தொடர் பேட்டிகளை அளித்திருக்கிறார். அப்போதெல்லாம் அவர் இத்தகைய அதிர்ச்சி தரும் தகவலை ஏன் கூறவில்லை என்பதற்கு அவர் தான் பதில் அளிக்க வேண்டும்.
கலாமை வைத்து மத ரீதியாக நட்பு ஊடகங்களில் குழப்பங்களை ஏற்படுத்தி வருபவர்களுக்கு, பொன்ராஜின் இந்த பேட்டி, கண்டிப்பாக அதீத புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.