Home Featured நாடு புகைமூட்டம்: ஜோகூர் பாருவில் 21 விமானச் சேவைகள் ரத்து!

புகைமூட்டம்: ஜோகூர் பாருவில் 21 விமானச் சேவைகள் ரத்து!

746
0
SHARE
Ad

28338147eகூலாய் – மோசமான புகைமூட்டம் காரணமாக ஜோகூர் பாருவில் உள்ள செனாய் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து 21 உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விமானங்களின் சேவைகள் இரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

விமானத்தை இயக்குவதற்கு தேவைப்படும் காணும் தன்மை (பார்வைத் தெளிவு – visibility) இல்லாத காரணத்தால் விமானச் சேவைகள் இரத்து செய்யப்பட்டதாக செனாய் விமான நிலையை தலைமை நடவடிக்கை அதிகாரி நூர் சஃபுரா சுய்ப் தெரிவித்தார்.

எனினும் புகைமூட்டம் சற்றே குறைந்து, காணும் தன்மை சற்றே அதிகரித்த நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை மதியம் 5 விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டதாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“இதே நிலை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தெரியவில்லை. எனினும் பயணிகள் அருகிலுள்ள தங்கு விடுதிகளுக்கு செல்ல வாகனங்களை ஏற்பாடு செய்வது உள்ளிட்ட உதவிகளைச் செய்து வருகிறோம்” என நூர் மேலும் தெரிவித்தார்.