Home Featured நாடு ‘பெட்டாலிங் வீதியில் ஒற்றுமை நிலவுகிறது – அதைக் கெடுத்துவிடாதீர்கள்’ என்கிறது சீனத் தூதரகம்!

‘பெட்டாலிங் வீதியில் ஒற்றுமை நிலவுகிறது – அதைக் கெடுத்துவிடாதீர்கள்’ என்கிறது சீனத் தூதரகம்!

858
0
SHARE
Ad

Huang_HuiKangகோலாலம்பூர் – மலேசியாவிற்கான சீனத் தூதர் ஹுவாங் ஹுய் காங் (படம்) நேற்று பெட்டாலிங் வீதியை பார்வையிட்டார்.

அப்பகுதியில் இன்று கலவரம் ஏற்படுத்துவோம் என்று சில தினங்களுக்கு முன்பு சுங்கை பெசார் அம்னோ தொகுதித் தலைவர் டத்தோ ஜமால் முகமட் யூனுஸ் அறிவித்ததையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த சீன வியாபாரிகள் கலக்கமடைந்திருந்தனர்.

நேற்று அவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய சீனத் தூதர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நான் பெட்டாலிங் ஸ்ட்ரீட் பகுதியை வலம் வந்தேன். அங்கு எல்லாம் சரியாக இருக்கின்றது. அங்கு அனைத்துலகப் பார்வையாளர்கள் நிறைய பேர் வருவதால் வியாபாரம் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. அதிலும் முக்கியமாக மற்ற இனத்தவர்களுடன் சீனர்கள் ஒற்றுமையாக உள்ளனர். நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், “இது போன்ற ஒரு நல்ல சூழல், உள்நோக்கம் கொண்ட சில தரப்பினரால் அழிக்கப்பட்டுவிடக் கூடாது” என்றும் ஹுவாங் கேட்டுக் கொண்டுள்ளார்.