Home Featured உலகம் பெண் பணியாளரை உடலுறவுக்கு வற்புறுத்திய சவுதி இளவரசர் கைது!

பெண் பணியாளரை உடலுறவுக்கு வற்புறுத்திய சவுதி இளவரசர் கைது!

697
0
SHARE
Ad

 

Los Angelesலாஸ் ஏஞ்சல்ஸ் – லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிவர்லி ஹில்ஸ் மேன்சன் என்ற இடத்தில் பெண் பணியாளர் ஒருவரை தன்னுடன் உடலுறவு கொள்ள வற்புறுத்தியதற்காக சவுதி அரேபிய இளவரசர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மஜீத் அப்துலாசிஸ் அல் சவுத் (வயது 28) என்ற அவரை கடந்த புதன்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறை கைது செய்து பின்னர், 300,000 அமெரிக்க டாலர் பிணையில் விடுவித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

எதிர்வரும் அக்டோபர் 19-ம் தேதி, தன் மீதான வழக்கிற்காக அவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

எனினும், சவுதி அரேபியா தூதரகம் இது குறித்து இன்னும் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், அவர் மீது மேலும் பல பெண்கள் புகார் அளித்து வருவதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன.