Home இந்தியா சோ ராமசாமி இறந்ததாக செய்தி வெளியிட்டு வம்பில் மாட்டிக் கொண்ட குஷ்பூ!

சோ ராமசாமி இறந்ததாக செய்தி வெளியிட்டு வம்பில் மாட்டிக் கொண்ட குஷ்பூ!

594
0
SHARE
Ad

kushbooசென்னை – நடிகரும், ‘துக்ளக்’ ஆசிரியருமான சோ ராமசாமி (80) உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகையும், காங்கிரசின் அகில இந்திய செய்தி தொடர்பாளருமான குஷ்பூ, டுவிட்டரில் அவர் இறந்துவிட்டதாகக் கூறி தவறுதலாக இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, இணையவாசிகள் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

அடுத்த சில நிமிடங்களில் தனது தவறை உணர்ந்து கொண்ட குஷ்பூ, உடனடியாக தனது பதிவிற்கு மன்னிப்பு கூறினார். எனினும், இணையவாசிகள் அவரை விடுவதாகத் தெரியவில்லை. சாதாரண ஒன்றிற்கு தன்முனைப்புடன் பொங்கி எழும் குஷ்பூ, ஒரு முக்கிய பதிவினை வெளியிடும் முன்னர் ஆயிரம் முறை யோசிக்க வேண்டாமா? என்று கூறி கடுமையாக அவரை சாடி வருகின்றனர்.