Home இந்தியா இந்தியத் தேசியக்கொடியில் பிரதமர் மோடி கையெழுத்திட்டதால் சர்ச்சை!

இந்தியத் தேசியக்கொடியில் பிரதமர் மோடி கையெழுத்திட்டதால் சர்ச்சை!

527
0
SHARE
Ad

1(1)புதுடெல்லி – பிரதமர் மோடி அமெரிக்கா  நியூயார்க் நகரின் வால்டோர்ப் ஆஸ்டோரியா ஓட்டலில் நடைபெற்ற அமெரிக்கத் தொழிலதிபர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் அமெரிக்காவின் பிரபல தொழிலதிபர்கள் 50 பேர் பங்கேற்றனர்.

அவர்களுக்கு வெகு சிறப்பான முறையில் விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விருந்தை மிகவும் சுவையாகச் செய்து கொடுத்ததாகத் தலைமை சமையற் கலைஞர் விகாஸ் கன்னாவைப் பிரதமர் மோடி பாராட்டினார்.

அப்போது விகாஸ்கன்னா தன்னிடமிருந்த இந்தியத் தேசியக் கொடியில் மோடியிடம் வாழ்த்துக் கையொப்பம் வாங்கியதாகக் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

மோடியிடம் இந்தியத் தேசியக் கொடியில் கையொப்பம் வாங்கியதை  அவர் மிகவும் பெருமையாக ஊடகங்களிடம் தெரிவித்தார்; தான் கையொப்பம் பெற்ற தேசியக் கொடியையும் காண்பித்தார்.

மேலும், அதை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்குப் பரிசாகக் கொடுக்கப் போவதாகவும் தெரிவித்தார்.

இது உடனே சர்ச்சையைக் கிளப்பியது. இது 125 கோடி இந்திய மக்களுக்கு மோடி செய்யும் அவமரியாதை என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜ்வாலா கண்டனம் தெரிவித்தார்.

“தேசியக்கொடி விதிமுறைகளின்படி அதைத் தவறாகப் பயன்படுத்தினால், 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது. இது பிரதமருக்குத் தெரியுமா இல்லையா? என்றும் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

இதனிடையே தேசியக் கொடியின் மீது பிரதமர் மோடி கையெழுத்துப் போட்டதாகக் கூறப்படும் தகவலை மத்திய அரசு மறுத்து உள்ளது.

இதுகுறித்து, டெல்லியில் மத்திய அரசின் செய்தித் தொடர்பாளர் பிராங்க் நரோன்ஹா, “தலைமை சமையற் கலைஞர் விகாஸ்கன்னாவின் மாற்றுத்திறனாளி மகள் கால் விரல்கள் மூலம் அழகிய வேலைப்பாட்டுடன் வடிவமைத்து இருந்த ஒரு துண்டு துணியில்தான் பிரதமர் கையெழுத்திட்டார். அந்த துணியில் வெள்ளை நிறமோ, அசோக சக்கரமோ கிடையாது” என்று மறுப்புத் தெரிவித்துள்ளார்.