Home Uncategorized தமிழக அரசைக் கண்டித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்புப் போராட்டம்!

தமிழக அரசைக் கண்டித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்புப் போராட்டம்!

773
0
SHARE
Ad

26-1443241674-bangalore-bandh345-600கலசா– மேகேதாட்டுத் திட்டத்தை எதிர்க்கும் தமிழக அரசைக் கண்டித்தும் கலசா- பண்டூரி திட்டத்தை எதிர்க்கும் கோவா அரசைக் கண்டித்தும் கர்நாடகாவில் இன்று கன்னட அமைப்புகளின் சார்பாக முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் கர்நாடகா புதிய அணைகள் கட்டுவதற்குத் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதேபோல் கோவா மாநிலத்தில் பாயும் மகதாயி ஆற்றில் கலசா- பண்டூரி என்ற இடத்தில் கர்நாடகா கால்வாய் அமைக்க கோவா அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

எனவே, இவ்விரு மாநில அரசையும் கண்டித்துக் கன்னட சலுவளி வாட்டாள் கட்சி மற்றும் கன்னட அமைப்புகளின் சார்பாக முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

#TamilSchoolmychoice

இந்த முழு அடைப்புப் போராட்டத்திற்கு ஜனதா தளம் கட்சி, அரசு ஊழியர் சங்கம் உள்பட சுமார் 1,300 சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

மேலும்,அரசு போக்குவரத்துத் தொழிலாளர்கள் சங்கங்களும், ஆட்டோ ஓட்டுநர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்திருப்பதால் மாநிலத்தில் இன்று  பேருந்து மற்றும் ஆட்டோக்கள் ஓடவில்லை.

பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பெங்களூரில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது

இப்போராட்டத்தால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.