Home கலை உலகம் சாதி-பணத்தால் நடிகர் சங்கத்திற்குள் பிளவு ஏற்படுத்துகிறார் விஷால் – சரத்குமார் குற்றச்சாட்டு!

சாதி-பணத்தால் நடிகர் சங்கத்திற்குள் பிளவு ஏற்படுத்துகிறார் விஷால் – சரத்குமார் குற்றச்சாட்டு!

742
0
SHARE
Ad

05-1420436127-sarathkumar-10-600மதுரை – நடிகர் சங்கத் தேர்தலுக்கு ஆதரவு திரட்டுவதற்காக சரத்குமார் அணியினர் மதுரைக்குச் சென்று அங்குள்ள நாடக நடிகர்களைச் சந்தித்துப் பேசினர்.

அச்சந்திப்பிற்குப் பிறகு சரத்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “விஷால் தரப்பினர் எங்கள் மீது பல விதமான குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றனர். எங்களை வேறு எந்த விதத்திலும் வெல்ல முடியாது என்பதால், பணம், சாதி அடிப்படையில் நடிகர் சங்கத்தில் பிளவு ஏற்படுத்த சதித் திட்டம் தீட்டுகிறார்கள்.

நான் உள்பட சங்க நிர்வாகிகள் பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்த போதும் இதுவரை சங்க நடவடிக்கைகளில் அரசியலைப் புகுத்தியது கிடையாது. ஆனால்,விஷால் தரப்பினர் சங்கப் பிரச்னையில் தேவையின்றி அரசியலைப் புகுத்துகின்றனர்.

#TamilSchoolmychoice

நடிகர் சங்கக் கட்டடம் தொடர்பாகத் தெளிவாக விளக்கம் அளித்த பிறகும், நாங்கள் ரூ.176 கோடி மோசடி செய்ததாக விஷாலும் எஸ்.வி.சேகரும் கூறியதால் தான், நடிகர்கள் விஷால், எஸ்.வி.சேகர் ஆகியோர் மீது தலா ரூ.10 கோடி கேட்டு மானநஷ்ட ஈடு வழக்குப் போட்டுள்ளேன்.

எங்களது தலைமையில் எந்தெந்தப் பதவிக்கு யார் யார் போட்டியிட உள்ளனர் என்பதை செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் அறிவிக்க உள்ளோம்” என்றார்.