Home Uncategorized மெக்கா கூட்ட நெரிசல்: பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

மெக்கா கூட்ட நெரிசல்: பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

662
0
SHARE
Ad

meசவுதி அரேபியா – மெக்காவின் மினா நகரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.

சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா நகருக்கு உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 20 லட்சம் பேர் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்கின்றனர்.இவ்வருடம் இந்தியாவில் இருந்து 1.5 லட்சம் பேர் புனித பயணம் சென்றுள்ளனர்.

இந்நிலையில், மெக்காவிற்கு அருகிலுள்ள மினா நகரில் சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சியின் போது, ஒரே இடத்தில் கூடியிருந்த லட்சக்கணக்கான  ஹஜ் பயணிகளுக்கிடையே திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 719 பேர் உயிரிழந்தனர்;863 பேர் படுகாயம் அடைந்தனர்.

#TamilSchoolmychoice

படுகாயமடைந்தோர் மருர்க்ருவனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப் பெற்று வந்தனர்.

இந்நிலையில், விபத்தில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவைச் சேர்ந்த 13 பேரைக் காணவில்லை.அவர்களின் கதி என்னவானது என்று தெரியவில்லை. அவர்களைத் தேடும் பணி நடைபெறுகிறது.