Home உலகம் சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் மீது பிரான்ஸ் முதன்முறையாகத் தாக்குதல்!

சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் மீது பிரான்ஸ் முதன்முறையாகத் தாக்குதல்!

535
0
SHARE
Ad

america-air-force-attack-in-isis-440x270பாரீஸ் –உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் மிகப் பெரிய பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீது அமெரிக்கா முதலாந நாடுகள் ஏற்கனவே வான்வழித் தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. இந்நிலையில், முதன் முறையாகப் பிரான்ஸ் படையினரும் ஐஎஸ் தீவிரவாதிகள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஐஎஸ் தீவிரவாதிகளின் நடமாட்டத்தை 15 நாட்களாகக் கண்காணித்து, சிரியாவின் நட்பு நாடுகளின் கூட்டுப்படையுடன் இணைந்து பிரான்ஸ் இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பதாகப் பிரான்ஸ் அதிபர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலில் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்துத் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.