Home இந்தியா மெக்கா நெரிசலில் சிக்கி உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்தது!

மெக்கா நெரிசலில் சிக்கி உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்தது!

579
0
SHARE
Ad

28-1443413572-mina-stampedeமினா – சவுதி அரேபியாவில் உள்ள புனித மெக்காவில் கடந்த 24-ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர நெரிசலில் சிக்கி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இவ்விபத்தில் பலியான இந்தியர்களின் விவரம் குறித்து சவுதி அரேபியாவில் உள்ள இந்தியத் தூதரகமும், ஜெட்டாவில் உள்ள ஹஜ் தூதரகமும் விசாரணை நடத்தி வந்தன.

விபத்து நடந்த அன்று 3 இந்தியர்கள் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. சனிக்கிழமை நிலவரப்படி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து 12 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

இவர்கள் ஜார்க்கண்ட், உத்தரபிரதேசம் மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிய வந்தது.

இந்நிலையில் இன்று, பலியான இந்தியர்களின் எண்ணிக்கை தற்போது 35 ஆக உயர்ந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், மெக்கா நெரிசலில் சிக்கி பலியானோரின் மொத்த எண்ணிக்கை  1090 ஆக உயர்ந்துள்ளது.