பார்சிலோனா – ஸ்பெயின் நாட்டடின் வடகிழக்கு மாகாணம் கேட்டலோனியாவாகும்.இது தன்னாட்சி உரிமை பெற்றது. இங்கு 75 லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.இவர்கள் ஸ்பெயினில் இருந்து பிரிந்து தனிநாடாகச் செயல்பட வேண்டிப் பல போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இதுதொடர்பாக அம்மக்களிடம் கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதற்கான ஓட்டு பதிவு நேற்று நடந்தது. இதில் தனிநாடு கோரிக்கையை வலியுறுத்தும் பக்கமே பெரும்பான்மை கிடைத்துள்ளது. 135 இடங்களில் 72 இடங்களைப் பிரிவினைவாதிகள் கூட்டணி கைப்பற்றியுள்ளது.
அதைத் தொடர்ந்து கருத்து வாக்கெடுப்பில் பிரிவினைவாதிகள் வெற்றி பெற்றதாக அப்பகுதியின் அதிபர் ஆர்தர்மாஸ் கூறியுள்ளார்.
மேலும், 2017–ஆம் ஆண்டு முதல் கடலோனியா பகுதி சுதந்திர நாடாக அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் ஸ்பெயின் 2 ஆக உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.