புத்ராஜெயா – சொத்து வாங்கியதில் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஊழல் செய்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள முன்னாள் சிலாங்கூர் மந்திரி பெசார் டாக்டர் முகமட் கிர் தோயோ இன்று கூட்டரசு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
அவருடன் அவரது மனைவி மற்றும் இரண்டு வழக்கறிஞர்கள் மற்றும் சில குழுவினர் வந்தனர். இன்னும் சில மணி நேரங்களில் அவருக்கு தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த செப்டமர் 22-ம் தேதி கூட்டரசு நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சுல்கிப்ளி அகமட் மாகினுடின் தலைமையில் ஐவர் அடங்கிய குழு கிர் தோயோ மீதான ஊழல் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தியது. எனினும், அவருக்கு வழங்கப்படும் தண்டனை குறித்த முடிவை இன்று ஒத்தி வைத்தது.
சிறைத் தண்டனைக்குப் பதிலாக, தான் இரண்டு ஆண்டுகள் மக்களுக்குப் பல் மருத்துவ சேவை வழங்குவதாக பல்மருத்துவருமான கிர் தோயோ (வயது 50) முறையிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
படம்: நன்றி ஸ்டார் இணையதளம்