அமெரிக்காவின் பென்சில்வானியா மாகாணத்தில் உள்ள பெத்தெல்ஹெம் நகரைச் சேர்ந்தவர் அபிகெயில் கிங்ஸ்டன்.இந்தப் பெண்ணிற்கு அக்டோபர் மாதம் 17-ஆம் தேதி திருமணம்.
இவரது குடும்ப வழக்கப்படி 120 ஆண்டுகளாக இவரது குடும்பத்தினர் பயன்படுத்திய திருமண ஆடையையே இவரும் அணியவிருக்கிறார். இத்திருமண உடை கடந்த 1895 ஆம் ஆண்டு அபிகெயிலின் கொள்ளுப் பாட்டியின் கொள்ளுப் பாட்டியான மாரி லொவ்ரி என்பவரால்தான் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது. அவரைத் தொடர்ந்து அந்தக் குடும்பத்துப் பெண்கள் அனைவரும் திருமணத்திற்கு அந்த ஆடையைத் தான் அணிந்து கொள்வது வழக்கமாகிவிட்டது.
அதன் பின்னர் இப்பொழுது அதனை அபிகெயில் பயன்படுத்தவிருக்கிறார்.அவ்வகையில் இந்த ஆடையை அணியவுள்ள 11-ஆவது மணப்பெண் அபிகெயில் ஆவார்.
இந்த ஆடை தயாரிக்கப்பட்டு 120 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டதால் சற்றுப் பொலிவிழந்து காணப்பட்டது.எனவே, நல்ல ஆடை வடிவமைப்பாளர் ஒருவரிடம் கொடுத்து இதை மறு சீரமைத்துள்ளனர்.
இந்த ஆடையை அணியும்போது சிண்ட்ரலா உடையை அணிவதுபோல் இருப்பதாக அந்த மணப் பெண் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.