Home இந்தியா 7 நாள் அமெரிக்கப் பயணம் நிறைவு: தாயகம் புறப்பட்டார் மோடி!

7 நாள் அமெரிக்கப் பயணம் நிறைவு: தாயகம் புறப்பட்டார் மோடி!

609
0
SHARE
Ad

21-1442822571-modi-in-chennai467நியூயார்க்-  ஏழு நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடி, அமெரிக்கப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து இன்று இந்தியாவிற்குப் புறப்பட்டார்.

இந்தப் பயணத்தில் மோடி மேற்கொண்ட  செயற்பாடுகளின் விவரங்கள்:

முதல் கட்டமாக அயர்லாந்து சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் எண்டா கென்னியைச் சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான நட்புறவைப் பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

#TamilSchoolmychoice

பின்னர் நியூயார்க் நகரில்  ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றினார். அதன்பின்னர் டிஜிட்டல் இந்தியா கருத்தரங்கில் சிறப்புரையாற்றினார்.

அமெரிக்காவின் பிரபல தொழிலதிபர்கள்  500 பேரைச் சந்தித்து, இந்தியாவில் தொழில் தொடங்குவது தொடர்பாகக் கலந்துரையாடினார்.அவர்களுக்குச் சிறப்பு விருந்தும் அளித்தார்.

கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா தொழிற்சாலைக்குச் சென்று, அங்கு புகை வெளியிடாதபடி பேட்டரியால் இயங்கும் கார்கள் தயாரிக்கப்படுவதைப் பார்வையிட்டார்.

பின்னர் சிலிக்கான் வேலிச் சென்று பேஸ்புக் நிறுவனத்தை பார்வையிட்டார். பேஸ்புக் நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் சக்கர்பர்க்குடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

அமெரிக்காவின் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளான டிம் குக்(ஆப்பிள்), சாந்தனு நாராயணன்(அடோபி), சத்யா நாதெள்ளா(மைக்ரோசாப்ட்), பால் ஜேக்கப்ஸ்(குவால்காம்), சுந்தர் பிச்சை(கூகுள்), ஜான் கேம்பர்ஸ்(சிஸ்கோ) ஆகியோரைத் தனித்தனியாகச் சந்தித்துப் பேசினார்.

சான் ஜோஸ் நகரில் சுமார் இருபதாயிரம் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார்.

நேற்று நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவைச் சந்தித்தார். மேலும், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், பிரான்சு அதிபர் பிரான்கோயிஸ் ஹாலண்டே, கத்தார் நாட்டு அதிபர் அமீர், பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ்,மெக்சிகோ அதிபர் என்ரிக் பெனா நியாட்டோ ஆகியோரையும் சந்தித்துப் பேசினார்.

அத்துடன் தனது அமெரிக்கச் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு தனது தனி விமானம் மூலம் நியூயார்க்கில் இருந்து இந்தியாவுக்குப் புறப்பட்டார்.

அமெரிக்கப் பயணம் தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.

அதில் அவர், தனது அமெரிக்கப் பயணம் வெற்றிகரமாக அமைந்திருந்ததாகவும், ஐக்கிய நாடுகள் சபையில் உலகின் முக்கிய பிரச்சனைகள் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும், உலக நாடுகளைச் சேர்ந்த பல்வேறு அதிபர்களைச் சந்தித்துப் பேசியதன் விளைவாக இந்தியாவுக்கு ஆதாயமான சாத்தியக் கூறுகள் உருவாகியுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.