Home கலை உலகம் தனது சொந்த வாழ்க்கையைப் படமாக எடுக்கிறார் சஞ்சய்தத்!

தனது சொந்த வாழ்க்கையைப் படமாக எடுக்கிறார் சஞ்சய்தத்!

659
0
SHARE
Ad

Evening-Tamil-News-Paper_72089350224மும்பை – மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டு 5 வருட சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் நடிகர் சஞ்சய்தத், தனது வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

அப்படத்தை அவர் தயாரிப்பாளர் விது வினோத் சோப்ரா மற்றும் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி ஆகியோருடன் இணைந்து தயாரிக்க உள்ளார்.

அந்தப் படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் சஞ்சய்தத் வேடத்தில் நடிகர் ரன்பீர் கபூர் நடிக்கிறார்.

#TamilSchoolmychoice

அதற்கு முன் தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனத்தைப் பிரபலமாக்குவதற்காக, அந்நிறுவனத்திற்கு ஒரு படத்தை இயக்கித் தர பிரபு தேவாவை ஒப்பந்தம் செய்துள்ளார் தத்தின் மனைவி மன்யதா. பிரபுதேவா இயக்கும் படத்திற்குப் பிறகு சஞ்சய்தத் படம் தொடங்கும்.

சஞ்சய் தத்தின் கதையை உள்ளதை உள்ளவாறும் நடந்ததை நடந்தவாறும் எடுக்க விரும்புவதாக அதன் இயக்குநர் ஹிரானி கூறியுள்ளார்.

அதனால், அப்படம் மிகுந்த வரவேற்பைப் பெறும் என நம்பப்படுகிறது.