Home இந்தியா சச்சின் டெண்டுல்கர் பாடிய தூய்மை இந்தியா பிரசாரப் பாடல்!

சச்சின் டெண்டுல்கர் பாடிய தூய்மை இந்தியா பிரசாரப் பாடல்!

658
0
SHARE
Ad

1443507826-6301புதுடில்லி – ‘தூய்மை இந்தியா திட்டம்’ தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு உருவாக்கப்பட்டுள்ள பிரசாரப் பாடலைப் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாடியுள்ளார். அவருடன் சங்கர் மகாதேவன் உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்து இப்பாடலைப் பாடியுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2 அன்று, தூய்மை இந்தியா திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தை மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக நடிகர்கள் கமல்ஹாசன், அமீர் கான், நடிகைகள் பிரியங்கா சோப்ரா, கஜோல் உள்ளிட்டோரைத் தூய்மை இந்தியா தூதராக மத்திய அரசு நியமித்தது.

#TamilSchoolmychoice

தூய்மை இந்தியா திட்டம் துவங்கப்பட்டு வரும் அக்டோபர் 2-ஆம் தேதியோடு ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதைக் கொண்டாடும் விதத்தில்  பிரசூன் ஜோஷியின் வரிகளில், ஷங்கர் – ஹசன்-லாயின் இசையி்ல் பிரசாரப் பாடல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாடல், அக்டோபர் 2ஆம் தேதி கொண்டாடப்படும் மகாத்மா காந்தி பிறந்தநாள் விழாவில் வெளியிடப்பட உள்ளது.