Home Featured தொழில் நுட்பம் பேஸ்புக்கில் காணொளிகள் தானாக இயங்குவது பிடிக்கவில்லையா? – நிறுத்தும் வழிமுறைகள் இதோ!

பேஸ்புக்கில் காணொளிகள் தானாக இயங்குவது பிடிக்கவில்லையா? – நிறுத்தும் வழிமுறைகள் இதோ!

633
0
SHARE
Ad

கோலாலம்பூர் – சமீப காலமாக பேஸ்புக் இணையம் மற்றும் செயலியில், உங்கள் டைம்லைனில் (Timeline) பார்க்கும் காணொளிகள் தானாக இயங்குவதைப் பார்த்திருப்பீர்கள். பயனர்களின் வசத்திக்காக பேஸ்புக் செய்துள்ள இந்த மேம்பாடு, ஒருவகையில் நமக்கு எளிது என்றாலும், பல வகையில் அபாயம் தான். நாம் விரும்பாத விசயங்களைக் கூடப் பார்க்க வேண்டிய கட்டாய சூழலுக்குத் தள்ளப்படுகிறோம்.

இன்னொரு வகையில், மனைவியோ, குழந்தைகளோ உங்கள் அருகில் இருக்கும் போது, உங்கள் பேஸ்புக்கில் டைம்லைனில் சேட்டைக்கார நண்பர் ஒருவரால் பகிர்ந்து கொள்ளப்பட்ட ‘எசக்கு பிசக்கான’ காணொளி தானாக இயங்கி உங்களை சிக்கலில் மாட்டிவிட்டுவிடும். பிறகு, பல கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டி வரும்.

அதோடு, எவ்வளவு நேரம் அந்தக் காணொளியில் நீங்கள் நேரத்தை செலவிடுகிறீர்களோ அதற்கு ஏற்ப உங்கள் இணைய சேவை வழங்கும் தரவின் அளவு (Data) குறையும். நீங்கள் வேகமாக அந்தக் காணொளியைக் கடந்து விட்டாலும் கூட அந்தக் காணொளி இயங்கிய (Play) அளவிற்கு வீணாக தரவு குறையும்.

#TamilSchoolmychoice

இது பேஸ்புக்கை இணையம் வழியாகப் பயன்படுத்துபவர்களுக்கும், செயலி வழியாகப் பயன்படுத்துபவர்களுக்கும் பொருந்தும்.

தானாக காணொளிகள் இயங்குவதை நிறுத்துவது எப்படி?

பேஸ்புக்கில் காணொளிகள் தானாக இயங்கத் தொடங்கியவுடன் உடனடியாக கூகுள் நண்பனிடம் உதவி கேட்டுத் தெரிந்து கொண்டவர்களுக்கு இந்தக் கட்டுரை உதவாது.

“ஏன் வீடியோஸ் தானா ப்ளே ஆகுதுன்னே தெரியலை” என்று தற்போது வரை புலம்பிக் கொண்டும், யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ள கூச்சப் பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு இந்தக் கட்டுரை கட்டாயம் உதவும்.

கீழ் காணும் வழிமுறைகளைப் பின்பற்றவும்:

பேஸ்புக் இணைய பக்கத்தில் வலது கோடியில் உள்ள கீழ்நோக்கியுள்ள அம்புக்குறியை அழுத்தினால், ‘Setting’ செல்வதற்கான ஒரு பட்டியல் கிடைக்கும். (பார்க்க படம் 1)

facebook-stop-autoplay-video-1

அடுத்ததாக, அதிலுள்ள Setting Option-ஐ அழுத்தினால், திறக்கும் திரையில் ஆகக் கடைசியாக Videos என்று இருக்கும். அதை அழுத்தினால், Autoplay videos on / off தேர்வை அடையலாம். அதில் off -ஐத் தேர்வு செய்வதன் மூலம் தானாக காணொளிகள் இயங்குவதை நிறுத்தலாம். (பார்க்க படம் 2).

stop-Auto-Play-Videos-on-Facebook

 

செயலியில் இந்த தேர்வு?

செயலியில் இடது கோடியில் உங்கள் முகப்புப் படத்திற்கு கீழே மேல் நோக்கி நகர்த்திக் கொண்டே வந்தால், Help & Setting என்று இருப்பதைக் காணலாம். அதில் App Setting -ஐ அழுத்தினால், அங்கு ‘Videos Play automatically’ என்ற தேர்வைக் காணலாம். அதை அழுத்தினால், On, Wi-fi only, off என்று மேலிருந்து கீழாக மூன்று தேர்வுகளைக் காணலாம். அதில் off என்பதை அழுத்துவதன் மூலம் காணொளி தானாக இயங்குவதை நிறுத்தலாம். படம் 1, 2, 3-ல் காண்க.

படம் 1:

Stop_Facebook_autoplaying_video_3

படம் 2:

tg-facebook-samsung-2-233x400

படம் 3:

twitter-screenshot-100610315-orig

தொகுப்பு: செல்லியல்