குஜராத் – பிரதமர் மோடி, கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது குஜராத் மாநிலம் ரனிப் நகரில் வாக்குச் சாவடி அருகே, பாஜக-வின் சின்னமான தாமரைச் சின்னத்துடன் செல்பி எடுத்துக் கொண்டார்.
இது தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் என்று கூறி தேர்தல் ஆணையம்,அவர் மீது வழக்குத் தொடுக்குமாறு மாநில அரசைக் கேட்டுக் கொண்டது.
இதன்படி அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது. பின்னர் இதில் மோடி மீது எந்தத் தவறும் இல்லை எனக் கூறி வழக்கு கைவிடப்பட்டது.
இவ்வழக்கில் மோடி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த நிஷாந்த் வர்மா என்பவர் குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. இவ்விவகாரத்தில் மாநில அரசு அவகாசம் கேட்டதால், இவ்வழக்கை அடுத்த மாதம் 6-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.