Home உலகம் மார்க், மோடியுடன் குலுக்கிய கையை சுத்தம் செய்யுங்கள் – சமூக ஆர்வலர்கள் அறிவுரை!

மார்க், மோடியுடன் குலுக்கிய கையை சுத்தம் செய்யுங்கள் – சமூக ஆர்வலர்கள் அறிவுரை!

906
0
SHARE
Ad

Facebooks-Mark-Zuckerberg-meets-PM-Modiசான் ஜோசே – மைக்ரோசாப்ட் நிறுவனர் சத்யா நாதெல்லா, மோடியுடன் கைகுலுக்கி விட்டு திரும்புகையில், தனது கைகளை துடைத்த விவகாரம் சர்ச்சையை கிளப்பி உள்ள நிலையில், அமெரிக்க வாழ் இந்தியர்களில் ஒரு பிரிவினர், நட்பு ஊடகங்களில் ‘Zuck, wash your hands!’ என்ற பெயரில் ஹேஷ் டேக் உருவாக்கி பரப்பி வருகின்றனர்.

கடந்த 2002-ம் குஜராத்தில் நடந்த மதக் கலவரத்தை மனதில் வைத்து அவர்கள், “மோடியுடன் பேஸ்புக் தலைமை நிர்வாகியான மார்க் சக்கர்பெர்க் கை குலுக்கியதால், மார்க்கின் கரங்களிலும் கரை படிந்து விட்டது. அதனை போக்குவதற்காக கிருமிநாசினியை குவளைகளில் அனுப்பி வைத்து வருகிறோம்” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், இதுவரை 250 கிருமிநாசினி குவளைகளையும் பேஸ்புக் நிறுவனத்திற்கு அனுப்பி சர்ச்சையைக் கிளப்பி உள்ளனர்.