Home இந்தியா இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தூதுவராக நடிகர் தனுஷ் நியமனம்!

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தூதுவராக நடிகர் தனுஷ் நியமனம்!

594
0
SHARE
Ad

1443582677-1578சென்னை – இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடரின் தூதுவராக நடிகர் தனுஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

8 அணிகள் இடையிலான 2-ஆவது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் வருகிற 3-ந் தேதி முதல் டிசம்பர் 20-ந் தேதி வரை நடக்கிறது.

நடிகர் தனுஷ் இந்தக் கால்பந்து போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ஆட்டத்தைப் பிரபலப்படுத்தும் பணியில் ஈடுபடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இது குறித்துச் சென்னை அண்ணா சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தனுஷ் கூறியதாவது:  “இந்தியன் சூப்பர் லீக் போட்டியின் தமிழகத் தூதுவராக நியமிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. சிறு வயது முதலே நான் கால்பந்து ரசிகன். கால்பந்து ஆட்டங்களை ரசித்துப் பார்ப்பேன்.

ஐ.எஸ்.எல். போட்டி கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் ஆனதுடன் நல்ல வரவேற்பையும் பெற்றது. இந்த சீசன் கடந்த ஆண்டை விட விறுவிறுப்பாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்த ஆண்டில் நிறைய திறமையான புதிய வீரர்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

நமது நாட்டில் கிரிக்கெட் ஆட்டம் தான் பிரபலமாக விளங்குகிறது. இந்த போட்டியின் மூலம் கால்பந்து ஆட்டம் நிச்சயம் பிரபலம் அடையும். சினிமாவில் கால்பந்து வீரராக நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன். அந்த பாத்திரத்திற்கு நான் பொருத்தமானவன் என்று நினைக்கிறேன்” என்று கூறினார்.