இந்த விருந்து உபசாரத்திற்கு இடையில் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா, அமெரிக்க அதிபர் ஒபாமாவைச் சந்தித்துச் சிறிது நேரம் பேசினார்.
அப்போது ஒபாமா, இலங்கையின் மக்களாட்சிக்கு வலுவூட்டும் விதத்தில் மைத்திரிபால சிறிசேனா பல ஆக்கப் பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகப் பாராட்டினார்.
அதற்கு மைத்திரிபால சிறிசேனா நன்றி தெரிவித்ததோடு, போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையில் மக்களிடையே நல்லிணக்கத்தைக் கொண்டு வந்து நாட்டை முன்னேற்றுவதற்குப் பாடுபடுவேன் என்று உறுதியளித்துள்ளார்.
Comments