Home Featured இந்தியா “சுந்தர் பிச்சையின் மாமனார் 70 வயதில் மறுமணம்” – செய்தியால் மக்கள் அதிருப்தி!

“சுந்தர் பிச்சையின் மாமனார் 70 வயதில் மறுமணம்” – செய்தியால் மக்கள் அதிருப்தி!

793
0
SHARE
Ad

10-1433914883-sundar-pichai2கோட்டா – கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சையின் மாமனார் ஒலாராம் ஹர்யானி தனது 70 -வது வயதில் நேற்று மறுமணம் செய்து கொண்டதாக இந்தியாவைச் சேர்ந்த பல பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது ஒரு செய்தியா? அவர் மறுமணம் செய்து கொள்வதை ஏன் இப்படி சர்ச்சையாக்குகிறீர்கள்? அவரவருக்கு தனிப்பட்ட முறையில் உரிமை உள்ளது அதற்கு ஏன் சுந்தர் பிச்சையின் பெயரைப் பயன்படுத்துகிறீர்கள்? எனப் பல கேள்விகளால் பத்திரிக்கைகளை வறுத்தெடுத்து வருகிறார்கள் சுந்தர் பிச்சை ஆதரவாளர்கள்.

கோட்டா நகரைச் சேர்ந்த 65 வயதான தனித்து வாழும் பெண் ஒருவரை அவர், ஆர்ய சமாஜ் வழக்கப்படி மறுமணம் செய்து கொண்டுள்ளார்.

#TamilSchoolmychoice

அரசாங்க பாலிடெக்னிக் கல்லூரியின் ஓய்வு பெற்ற பணியாளரான அவர், மும்பை நகரில் வசித்து வருகின்றார். அவரது மகள் அஞ்சலி தான் சுந்தர் பிச்சையின் மனைவி.

ஒவ்வொருவருக்கும் அவரவர் தனிப்பட்ட வாழ்க்கையை தீர்மானித்துக் கொள்ள உரிமை உள்ளது என்று மறுமணம் செய்து கொண்ட ஒலாராம் தெரிவித்துள்ளார்.