Home கலை உலகம் நடிகர் சங்கத் தேர்தல்: நாளை முதல் வேட்பு மனுத் தாக்கல் தொடக்கம்!

நடிகர் சங்கத் தேர்தல்: நாளை முதல் வேட்பு மனுத் தாக்கல் தொடக்கம்!

706
0
SHARE
Ad

vishalsarath_2394632fசென்னை – தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வேட்பு மனு தாக்கல் நாளை முதல் தொடங்குகிறது; சனிக்கிழமையுடன் முடிவடைகிறது.

அக்டோபர் 18-ஆம் தேதி நடிகர் சங்கத் தேர்தல் சென்னை மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள செயின்ட் எப்பாஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில், தேர்தல் அதிகாரி ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் நடைபெறவுள்ளது.

இத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் அக்டோபர் 3-ந் தேதி வரை தேர்தல் அலுவலகத்தில் வேட்பு மனுக்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

#TamilSchoolmychoice

தேர்தலில் போட்டியிடத் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 4-ஆம் தேதி காலையில் பரிசீலிக்கப்பட்டு, அன்று மாலை 4 மணிக்குப் போட்டியிடத் தகுதியான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

இறுதி வேட்பாளர் பட்டியல் 8-ஆம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு  சரத்குமார் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து விஷால் அணி சார்பில் தலைவர் பதவிக்கு நாசர் போட்டியிடுகிறார். விஷால் பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.