Home Featured நாடு பேஸ்புக், இன்ஸ்டாகிராமால் பாதிக்கப்பட்டிருக்கும் இரு மலேசிய அரச வாரிசுகள்!

பேஸ்புக், இன்ஸ்டாகிராமால் பாதிக்கப்பட்டிருக்கும் இரு மலேசிய அரச வாரிசுகள்!

635
0
SHARE
Ad

rahim-thamby-chik2கோலாலம்பூர் – நட்பு ஊடகங்களால் பல நன்மைகள் இருந்தாலும், பிரபலங்களுக்கும், முக்கியப் பிரமுகர்களுக்கும் அது ஒரு வகையில் சிக்கலாகவே இருந்து வருகின்றது.

யாரோ ஒருவர் எங்கோ இருந்து கொண்டு, நட்பு ஊடகங்களின் வழியாக அவர்களைப் பற்றிய சர்ச்சையான தகவல்களைப் பதிவு செய்துவிடுகின்றார் அல்லது பிரபலங்கள் பதிவு செய்யும் ஏதாவது ஒரு தகவல் வேறு வகையில் புரிந்து கொள்ளப்பட்டு அதன் மூலம் அவர்களுக்கு மக்கள் மத்தியில் கண்டனக் குரல்கள் எழுவது தற்போது வழக்கத்தில் இருந்து வருகின்றது.

அண்மையில், மலேசியாவைச் சேர்ந்த இரு அரச குடும்ப வாரிசுகளுக்கும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

சிலாங்கூர் இளவரசர் கத்தோலிக்க மதத்திற்கு மாறிவிட்டதாகவும், அதனால் தான் ஹஜ் உட்பட பல இடங்களில் பேரிடர்கள் ஏற்பட்டதாகவும், முன்னாள் மலாக்கா முதல்வர் ரஹிம் தம்பிசிக் (படம்), அண்மையில் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட கருத்து, சிலாங்கூர் அரச குடும்பத்தை கலங்கச் செய்தது.

தனது செயலுக்கு அவர் பலமுறை மன்னிப்பு கேட்டாலும் கூட, சிலாங்கூர் அரண்மனையால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நேற்று இந்த விவகாரம் குறித்து முடிவெடுக்க கூட்டப்பட்ட சிலாங்கூர் அரச நீதிவிசாரணை சபை, ரஹிமின் பொறுப்பில்லாத செயலை வன்மையாகக் கண்டித்துள்ளது.

இதனிடையே, ஜோகூர் இளவரசி துங்கு அமினா மைமுனா இஸ்கண்டாரியா தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தை விட்டு வெளியேறிவிட்டதாக அறிவித்துள்ளார்.

Tunku_Aminah_bt_Sultan_Ibrahimகாரணம், அவர் துடூங் (atudung) எனப்படும் இஸ்லாமியப் பெண்கள் அணியும் தலைமறைப்பை அணியவில்லை என அவருக்கு எதிராகப் பலரும் கருத்துத் தெரிவித்ததால், தான் இந்த முடிவை எடுத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மக்கள் தன்னைப் பற்றியும், தான் அணியும் ஆடைகள் பற்றியும் அவசரப்பட்டு முடிவெடுத்துவிடக்கூடாதும் என்றும், அது தனக்கும் அல்லாவுக்கும் இடையிலுள்ள விசயம் என்றும் தெரிவித்துள்ளார்.

“இது தான் நான் எடுத்ததிலேயே சிறந்த முடிவு என்று நம்புகின்றேன்”

“பிரபலமாக இருப்பது எனக்காக அல்ல என்பதை உணர்கிறேன் மற்றும் இந்த மாதத் தொடக்கத்தில் என்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தை விட்டு வெளியேறியதில் உண்மையில் மகிழ்ச்சியடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.