Home Featured நாடு 1எம்டிபி விவகாரத்தில் விரைவில் தீர்வு காண வேண்டும் – ஆட்சியாளர்கள் வலியுறுத்து!

1எம்டிபி விவகாரத்தில் விரைவில் தீர்வு காண வேண்டும் – ஆட்சியாளர்கள் வலியுறுத்து!

798
0
SHARE
Ad

rulers1mdb0715கோலாலம்பூர் – 1எம்டிபி விவகாரத்தில் விசாரணையைத் தீவிரப் படுத்தி அரசாங்கம் உடனடியாக அதற்குத் தீர்வு காண்பதோடு, அதில் உண்மை இருப்பின் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலாய் ஆட்சியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நேற்று பேரரசர் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், அனைவரும் உண்மையாக, நேர்மையாக விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்து அதன் நோக்கத்தை அடைய உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், விசாரணையின் முடிவுகள் யாவும் வெளிப்படையான முறையில் நடத்தப்பட வேண்டும் அப்போது தான் மக்களுக்கு இந்த அரசாங்கம் எதையும் மூடி மறைக்கவில்லை என்ற நம்பிக்கை வரும் என்றும் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இதனிடையே, 239-வது ஆட்சியாளர்கள் மாநாடு இன்றும், நாளையும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.