Home Featured உலகம் அரசுக்கு எதிராக பேஸ்புக்கில் எழுதினால் மரண தண்டனை – சவுதி அரேபியா முடிவு!

அரசுக்கு எதிராக பேஸ்புக்கில் எழுதினால் மரண தண்டனை – சவுதி அரேபியா முடிவு!

622
0
SHARE
Ad

justiceரியாத் – அரசாங்கத்தைப் பற்றி நட்பு ஊடகங்களான பேஸ்புக், டுவிட்டர் போன்றவற்றில் தவறான கருத்துக் கூறும் இணையவாசிகளுக்கு மரண தண்டனை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று சவுதி அரசாங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது.

இணையவாசிகளைக் கண்காணிக்க புதிய துறை ஒன்றையும் அமைத்துள்ள அரசாங்கம், அதைப் பயன்படுத்துபவர்களுக்கு மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கவுள்ளது.

இது குறித்து சவூதி அரசு வெளியிட்டுள்ள தகவலில், மிக மோசமான வதந்திகளைப் பரப்புபவர்களுக்கு மட்டுமே மரண தண்டனை வழங்கப்படும் என்றும், மற்ற குற்றங்களைப் புரிபவர்களுக்கு சவுக்கடி, வீட்டுக் காவலில் வைத்தல், சிறை மற்றும் அவர்களின் இணையத் தளங்களை முடக்குதல் போன்ற தண்டனைகளும் வழங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

ஆனால், அரசாங்கத்தின் இந்த முடிவை அறிந்தும் சில இணையாசிகள் துணிச்சலாக, அம்முடிவை விமர்சித்து நட்பு ஊடகங்களில் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன், மினாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பல ஆயிரம் மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களை காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளை சவூதி அரசு செய்ய தவறியதாக நட்பு ஊடகங்களில் வதந்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.