Home Featured நாடு கைருடினின் வழக்கறிஞர் மத்தியாஸ் சாங் கைது!

கைருடினின் வழக்கறிஞர் மத்தியாஸ் சாங் கைது!

558
0
SHARE
Ad

Matthias-Chang-lawyer-for-khairuddinகோலாலம்பூர்- அம்னோ முன்னாள் தலைவர் கைருடின் அபுஹாசானின் வழக்கறிஞர் மத்தியாஸ் சாங் (படம்) இன்று மதியம் பாதுகாப்பு குற்றச்சாட்டின் (Sosma) கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

டாங் வாங்கி தலைமை காவல்நிலையத்தில் மத்தியாஸ் சாங் தடுத்து வைக்கப்பட்டதாக அவரது உதவியாளர் மலேசியாகினியிடம் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு இரண்டு முறை அவர் தனது கட்சிக்காரர் கைருடினை சந்தித்தது குறித்து காவல்துறை அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றது.

#TamilSchoolmychoice

கடந்த இரு வாரங்களுக்கு முன்பே அவர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.