Home Featured இந்தியா 83-வது இந்திய விமானப்படை தினக் கொண்டாட்டத்தில் சச்சின்!

83-வது இந்திய விமானப்படை தினக் கொண்டாட்டத்தில் சச்சின்!

601
0
SHARE
Ad

sachinபுதுடெல்லி – இந்திய விமானப் படை இன்று அக்டோபர் 8-ம் தேதி, 83-வது விமானப் படை தினத்தை கொண்டாடி வருகின்றது. கசியாபாத் ஹிண்டோம் விமானப் படைத் தளத்தில் நடைபெற்ற கொண்டாட்ட விழாவில் இந்தியாவின் உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் விமானப்படை உடுப்புடன் கலந்து கொண்டார்.

Sachin 1

இந்தியக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட சச்சின், இந்திய விமானப் படையில் குழுத் தலைவராகப் (குரூப் கேப்டன்) பொறுப்பு வகிக்கும் முதல் விளையாட்டு வீரர் ஆவார்.

#TamilSchoolmychoice

Sachin 3

விழாவில் கலந்து கொண்ட சச்சின் அப்புகைப்படங்களை தனது டுவிட்டரில் பகிந்து கொண்டுள்ளதோடு, இந்திய விமானப்படையின் உழைப்பை எண்ணி பெருமையடைவதாகவும், அவர்களின் தியாகத்திற்கும், செயல்பாடுகளுக்கும் தான் நன்றியைக் கூறிக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.