Home Featured கலையுலகம் வேதாளம் பட முன்னோட்டம்: கட்டுமஸ்தான அஜித்தின் காதுகள் எங்கே?

வேதாளம் பட முன்னோட்டம்: கட்டுமஸ்தான அஜித்தின் காதுகள் எங்கே?

894
0
SHARE
Ad

Ajith vetha

கோலாலம்பூர் – நேற்று வெளியாகி ரசிகர்களிடையே சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கும் நடிகர் அஜித்தின் புதிய படமான ‘வேதாளம்’ முன்னோட்டத்தில், ஒரு காட்சியில் அஜித் இதுவரையில் இல்லாத வகையில் கட்டுமஸ்தான உடற்கட்டோடு காட்சியளிக்கிறார்.

அதில் உன்னிப்பாக கவனித்தால், அஜித்தின் காதுகள் இல்லாதது போல் தோற்றமளிக்கிறது. இதைக் கவனித்துவிட்ட புகைப்பட மற்றும் தொழில்நுட்பக் கலைஞரான ரமேஷ் என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் அப்புகைப்படத்தைப் பதிவு செய்திருப்பதோடு, அஜித்தை கட்டுமஸ்தாகக் காட்ட நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியவர்கள், காதுகளை வரையத் தவறிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

எனினும், முன்னோட்டத்தை வைத்து எதையும் தற்போது முடிவு செய்துவிட முடியாது என்றே தோன்றுகிறது. காரணம், அது தொழில்நுட்பக் கோளாறா? அல்லது அதற்கும் கதைக்கும் சம்பந்தம் உள்ளதா? என்று தெரியாது.

எனினும், “காதுகள் இருக்கிறது நன்றாகப் பாருங்கள்” என்று அதற்கு மறுப்பு தெரிவித்து விரிவுபடுத்தப்பட்ட (Zoom) ஒரு புகைப்படமும் டுவிட்டரில் தற்போது வெளியாகி வருகின்றது.

தொகுப்பு: செல்லியல்